மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு

-யாழ் நிருபர்-

மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/401 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/356 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவருமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததில் வீடு பகுதியளவில் சேதமடைந்து குறித்த குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.