மழையுடனான காலநிலை : வெள்ள அபாய எச்சரிக்கை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மல்வத்து ஓயா உள்ளிட்ட 12 ஆறுகளுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மல்வத்து ஓயா, கலா ஓயா, கனகராயன் ஆறு, மா ஓயா, பரங்கி ஆறு, மகாவலி கங்கை, மாதுறு ஓயா மற்றும் யான் ஓயா உள்ளிட்டவற்றுக்கு வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆறுகளை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.