மழையுடனான காலநிலை: அடுத்தடுத்து விடுக்கப்படும் வெள்ள அபாய எச்சரிக்கை

மழையுடனான காலநிலை காரணமாக தம்புள்ளை – தம்புள்ளு ஓயா நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தம்புள்ளு ஓயாவிற்கு வினாடிக்கு 5இ000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படும் எனவும்இ அந்த நீரோடை ஊடாக கலா ஏரி மற்றும் பலாலு ஏரிக்கு நீர் சென்றடையும் எனவும் நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்இ கடும் மழை காரணமாக மகாவலி ஆறு மற்றும் ஹடா ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகள் அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.