மலையேறியவர் மீது சரிந்து விழுந்த கற்பாறை

கண்டி அம்புலுவாவ மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணம் செல்வதற்கு தவறுதலான பாதையினூடாக மலையேறி சென்றுகொண்டிருந்த நபர் மீது கற்பாறை சரிந்து வீழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹியோவிட்ட முருத்தெட்டுவே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இதன் போது உயிர் இழந்துள்ளார்.

நான்கு பேர் கொண்ட குழுவினர் மலை ஏறிக்கொண்டிருந்தபோதே, அவர்களில் ஒருவர் கற்பாறை வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான நபர் மனைவியிடம் கூறாமல் தனது நான்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்