மலையுடன் மோதிய பேருந்து: சாரதி படுகாயம்

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் இராவணா நீர்வீழ்ச்சிக்கு அருகில் இன்று வியாழக்கிழமை காலை சொகுசு பேருந்து அருகிலுள்ள மலையில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து மாகும்புர வரை பயணிகளுடன் பயணித்த பேருந்தின் பிரேக் செயற்படாததால் பேருந்து சாரதி பேருந்தை மலையில் மோதச் செய்து நிறுத்தியுள்ளார்.

அவ்வாறு செய்யவில்லையென்றால் பேருந்து செங்குத்தான பாறையில் உருண்டு விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

விபத்து காரணமாக சாரதி படுகாயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்