மலையக புகையிரத மார்க்கத்தில் உள்ள கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

மலையக புகையிரத மார்க்கத்தில் பண்டாரவளைக்கும் தியத்தலாவிற்கும் இடையில் உள்ள கால்வாய் ஒன்றுக்கு அருகில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் அவரது அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக, பதுளைக்கான புகையிரத சேவை 3 மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்