மலையக தொடருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

-பதுளை நிருபர்-

இன்று அதிகாலை 8.30 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட தொடருந்து ஹாலிஎலக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில் தடம்புரண்டுள்ளது‌.

இதனால் மலையகத்துக்கான தொடருந்து போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த தொடருந்தை தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Minnal24 FM