Sri Lanka Tamil News Site

மருத்துவ நெருக்கடிகளை நிவர்த்தி செய்ய உலக சுகாதார நிறுவனம் நடவடிக்கை

- Advertisement -

இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகள் தொடர்ந்து நடத்துவதற்கான வசதிகள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதில் உள்ள நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு, உலக சுகாதார நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடினார்.

- Advertisement -

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டின் போது இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -