மருதமுனையில் வடிகான் நிர்மாண பணி ஆரம்பம்
-அம்பாறை நிருபர்-
மருதமுனை 65 மீட்டர் சுனாமி மீள்குடியேற்றக் கிராமத்தில் கல்முனை மாநகர சபையினால் வடிகான் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மழை காலங்களில் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்கும் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவிற்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் கிராமத்தின் நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாக மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் வடிகான் நிர்மாணப் பணிகளை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் கண்காணிப்பு விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார்.
வெள்ள அனர்த்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இங்கு கல்முனை மாநகர சபையினால் 05 முக்கிய இடங்களில் வடிகான்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் ஊடாக இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து வடிகான்களும் இணைக்கப்பட்டு வடிகான் கட்டமைப்பு முழுமைப்படுத்தப்படவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்