மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்: போக்குவரத்து முடங்கலாம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது.

தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே குறித்த பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரதான பாதையான ஏ 9 வீதிக்கு செல்கின்ற பாதையிலே குறித்த பாலம் அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்து முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பாதை ஊடாக அதிக எடை கொண்ட பொருட்கள் கொண்டுவந்தமையினாலேயே இப் பாலம் உடையக்கூடிய நிலைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்