கரையொதுங்கிய மர்ம வீட்டிலிருந்து 18 புத்தர் சிலைகள் மீட்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று வியாழக்கிழமை கரையொதுங்கிய மர்ம நினைவுச் சின்னத்தில் இருந்த 18 புத்தர் சிலைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த சில நாட்களாக ஏற்பட்ட காலநிலை மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி புயல் நிலநடுக்கம் போன்றவை தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது.

இந்நிலையில் மியன்மாரில் இருந்து இந்த நினைவாலயம் வந்து இருக்கலாம் என நம்ப படுகிறது.

குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் அதில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும், செப்பேடுகளையும் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிலைகள் உட்பட்ட பொருட்கள் தற்பொழுது மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 வானொலி