மன்னார் மாவட்டம் தொடர்பான ஆய்வுக்காணொளி வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் கையளிப்பு

மன்னார் நிருபர்

 

மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகனின் ஆய்விலும் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் நாகர்கள், இயக்கர்கள் வாழ்ந்த இடங்கள் தொடர்பாக இடப்பெயர் (ஊர்ப்பெயர்) ஆய்வு மூலமாக உருவாக்கப்பட்ட ஆய்வுக் வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரனிடம் இன்று திங்கட்கிழமை மதியம் கையளிக்கப்பட்டது

இந்த ஆய்வுக் காணொளியானது ஊடகவியலாளர் ஜெகனின் சங்க கால இலக்கிய நூல்கள் மூலமாகவும் மன்னார் மாதோட்டத்தில் மக்கள் வசிக்கும் இடப் பெயர் மற்றும் கள ஆய்வின் மூலமாக உருவாக்கப்பட்டது

இலங்கைக்கு விஜயன் வருவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த தமிழர்களின் மூத்த குடிகளாகவும் கோத்திர இனத்தவராகவும் வாழ்ந்த நாகர் இயக்கர் வேடுவர் போன்றவர்கள் தமிழர்கள் என்பதை இந்த காணொளி எடுத்துக் கூறுகிறது.

அணுசரணையாளர் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் மன்னார் ஆசிரியர் ஆலோசகர் சந்திரலிங்கம் றமேஸ்  கலந்து கொண்டார்கள்.

இந்த ஆய்வில் மூலம் நாகர் இனத்தவர்கள் மன்னார் மாந்தை பகுதியில் நாகதாழ்வு,  பெரிய நாவற்குளம், சிறு நாவற்குளம்,  நாகபடுவான் போன்ற இடங்களிலும் , இயக்கர் இனத்தவர்கள் மன்னார் கட்டுக்கரையை அண்டிய பகுதிகளில் பண்ணை வெட்டுவான், தம்பனைக்குளம், கோரமோட்டை, நெடுங்கண்டல், நெட்டாங்கண்டல், பரப்பாங்கண்டல் உட்பட பல பகுதிகளிலும் வாழ்ந்துள்ளார்கள். என்பதை அப்பகுதிகளில் காணப்படும் இடப்பெயர்கள் ஆய்வின் மூலம் கூறப்பட்டுள்ளது

அதுமட்டுமல்லாது இயக்கர்கள் நாகர்கள் என்பவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் இந்திய தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் போன்ற இடங்களில் வாழ்ந்துள்ளார்கள் என்பதை குறித்த காணொளி மூலம் அறிய முடிகிறது

குறித்த வரலாற்று ஆவணக் கானொளியை பல்கலைக்கழக மாணவர்களுக்கு காண்பித்து எமது வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் வவுனியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரனிடம் இந்த காணொளி கையளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க