மன்னார்-மடு வீதியில் விபத்து : சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு

-மன்னார் நிருபர்-

மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் காயங்களுடன் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தவர் -மன்னார் பெரியகமம் பிரதேசத்தில் வசித்து வரும் 35 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என தெரிய வருகிறது.

காயமடைந்தவர் முருங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்