மன்னார் பொலிஸாரின் சிறுவர்தினம்

-மன்னார் நிருபர்-

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி மன்னார் பொலிஸார் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார், மன்னார் மெசிடோ நிறுவன தலைவர் ஜாட்சன் பிகிராடோஇமன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்இமன்னார் பிரதேசச் செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னாரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றைச் சேர்ந்த சிறுவர்கள் கலந்து கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை அரங்கேற்றினர். பின்னர் வருகை தந்த விருந்தினர்களினால் சிறுவர்களுக்கு பரிசுப்பொதி வழங்கி கௌரவிக்கப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் சிறுவர் தின கொண்டாட்டம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்