மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வழக்கு விசாரணை ஒன்றிற்காக மன்னார் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த குழுவினர் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இதன் போது நான்கு பேர் காயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட 4 பேரும் வழக்கு ஒன்றின் சாட்சிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 வானொலி