மன்னாரை சேர்ந்த சச்சிதானந்தன் சுதர்சன் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

-மன்னார் நிருபர்-

மன்னார் மூர் வீதியைச் சேர்ந்த சச்சிதானந்தன் சுதர்சன் அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னார் நீதவான் பி.சிவகுமார் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகவும், மன்னார் மூர்வீதியை வதிவிடமாகவும் கொண்டவர்.

அச்சுவேலி புனித திரேசா கல்லூரியில் ஆரம்ப கல்வியும், அச்சுவேலி மத்திய கல்லூரி, அடம்பன் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளில் உயர் கல்வியையும் தொடர்ந்தார்.

இவர் நானாட்டான் பிரதேச  செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.

மன்னார் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாளராகவும் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.