மன்னாரில் 6 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னார் தெற்கு கடல்பகுதியில் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 177 கிலோ 60 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மீட்கப்பட்டுள்ள குறித்த கேரள கஞ்சாப் பொதிகள் கடற்படை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் தீவைத்து அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.