மன்னாரில் அரசிற்கு எதிராக கண்டன போராட்டம்

-மன்னார் நிருபர்-

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை  காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமயில்
கோட்டபாயக ராஜபக்ஸவின் அரசாங்கத்திற்கு எதிராக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசின் தூர நோக்கற்ற நிதி நிர்வாக முகாமைத்துவத்தால் நாடு பெரும் பொருளாதார பின்னடைவை எதிர் நோக்கி பட்டினிச்சாவை நோக்கி நகர்கின்றது.

குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், எரிவாயு மற்றும் மின்சாரம் இன்றி பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இச் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை  காலை 9.30மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு கண்டன போராட்டம் இடம் பெற்றது.

குறித்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், உள்ளூட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், சமூக ஆர்வளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘கோட்டபாயவே வெளியேறு’, ‘குடும்ப ஆட்சி வேண்டாம்’, ‘மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கே கொடு’ போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க