மனைவியைத் தாக்கி கொலை செய்த இலங்கையருக்கு 37 வருட சிறை

அவுஸ்திரேலியாவில் தமது மனைவியைத் தாக்கி கொலை செய்த குற்றத்துக்காக இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்தநாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தினுஷ் குரேரா (வயது 47)  என்ற இலங்கையருக்கே விக்டோரியா நீதிமன்றினால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக தகராறொன்றின்போது, குறித்த நபர்,   நெலோமி பெரேரா (வயது 43) என்ற தனது மனைவியை தாக்கிக் கொலை செய்துள்ளதாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

அதன்படி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்யப்பட்ட நெலோமி பெரேரா தனது கணவருடன்
நெலோமி பெரேராவின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுகின்றனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்