மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட பெற்றோர்கள்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.