மத்திய அதிவேக நெடுஞ்சாலையை நிறைவு செய்ய ஜப்பானின் உதவி கோரப்பட்டுள்ளது: ஜனாதிபதி
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு ஜப்பானிய தூதுவரின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அதனை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்றுவரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கண்டியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
கண்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றதாகவும், தற்போது நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்