மதுபான சாலையை மூடுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

-மூதூர் நிருபர்-

மூதூர் இருதயபுரத்தில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை மூடுமாறு வலியுறுத்தி குறித்த மதுபான சாலைக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களே அதிகளவில் பங்கு பெற்றிருந்தனர்.

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குறித்த மதுபான சாலை இன்று காலை மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் மதுபான சாலைக்கு முன்னாள் நின்று சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து மதுபான சாலை மூடப்பட்டது.

இதன்போது குறித்த மதுபான சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு குறித்த இடத்தில் கொட்டில் அமைத்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முனைந்த போது அவ்விடம் வந்த பொலிஸார் கொட்டில் அமைப்பதை தடுத்து நிறுத்தியிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்