மண்மேடு சரிந்ததில் வீதியூடான போக்குவரத்திற்கு தடை

-பதுளை நிருபர்-

பசறையில் இருந்து ஹிங்குறுகடுவ ஊடாக வெள்ளவாய செல்லும் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

ஹிங்குறுகடுவ 10 கட்டை மற்றும் ஹிங்குறுகடுவ வைத்திய சாலைக்கு அருகாமையில் பாரிய மண்மேட்டு சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

மண்மேட்டை அகற்றி வீதியை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.