மண்முனை மேற்கு பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ள புதிய சந்தை தொகுதிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டி எழுப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

உள்ளூர் மேம்பாட்டு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதி உதவியுடன் 21 மில்லியன் ரூபா செலவில் மண்முனை மேற்கு பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ள புதிய சந்தை தொகுதிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று மண்முனை மேற்கு பிரதேச பிரதேச சபை செயலாளர் கிருஷ்ணபிள்ளை தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக ராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை  சந்திரகாந்தன் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

பூஜைகள் இடம் பெற்று சுப நேரத்தில் புதிய சந்தைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு கலந்து கொண்ட அதிதிகளால் முன்னெடுக்கப்பட்டது

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்யானந்தியினி நமசிவாயம்,  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ் சபேசன், பிரதேச சபையின் ஊழியர்கள், அரச உயர் அதிகாரிகள், பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்