மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை : பொதுமக்களை வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் 2ஆம் நிலை எச்சரிக்கையும், காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் முதலாம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.