மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நாட்டில் பெய்து வரும் தொடர் மழைக்காரணமாக 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நாளை ஞாயிற்று கிழமை மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி, மாத்தறை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி அந்தந்த பகுதி மக்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்