மண்சரிவு: ஆரம்பப்பிரிவுக்கு பூட்டு

பதுளை மாவட்டத்தின் பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை பெய்த கடும் மழை காரணமாக மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

மஹிந்தோதயா கட்டத்தில் முறையான வடிகால் அமைப்பு இல்லாத காரணத்தால் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இன்றைய தினம் செவ்வாய் கிழமை தரம் 3,4,5 மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடு நடைபெறாமல் மாணவர்கள் வீட்டிற்கு திருப்பியனுப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலுமொரு ஆரம்பப்பிரிவு கட்டடம் பாதிப்புக்கு உள்ளாகி தொடர்ந்து மண்சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்