மணவாளக் கோல பூந்தண்டிகை உற்சவம்

-யாழ் நிருபர்-

வரலாற்றுச் சிறப்புமிக்க அரியாலை பிரப்பங்குளம் மகாமாரியம்மன் தேவஸ்தானத்தின் 1008 சங்காபிஷேக, மணவாளக் கோல பூந்தண்டிகை உற்சவம் நேற்று சனிக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் மகாமாரியம்மனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, மாலை பூந்தண்டிகை பீடத்தில் வீற்றிருந்து அம்பிகை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்