மட்/ககு/ கிரான் மத்திய கல்லூரியின் 78 வது கல்லூரி தினம்

-கிரான் நிருபர்-

மட்/ககு/ கிரான் மத்திய கல்லூரியின் 78 ஆவது கல்லூரி தினம் இன்று ஞாயிற்று கிழமை பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் ஊடாக பாடசாலையின் தரத்தினையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவது என்னும் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்பட்டது.

பழைய மாணவர்கள், பாடசாலை நிர்வாகம் என்பனவற்றினால் ஒருங்கிணைக்கப்பட்டு மாணவர்களின் ஆளுமை விருத்திற்கான விசேட செயற்திட்டங்கள் மற்றும் மென்திறன் கழகம், இளம் கண்டு பிடிப்பாளர்கள் கழகம், ஊடக மன்றம் போன்ற கழகங்களும் பாடசாலை மட்டத்தில் உருவாக்கப்பட்டது.

நிகழ்வானது பாடசாலை அதிபர் மா. தவராசா தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் வி. முரளிதரன், உதவி மாவட்ட அரசங்க அதிபர் ஆ.நவேஸ்வரன் மற்றும் வீ.நவநீதன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலகம் அயல் பாடசாலையின் அதிபர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு பாடசாலை கொடி அசைக்கப்பட்டு நடைபவனி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் நடைபவனியில் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர் சமூகம் வெவ்வேறு விதமான மேலாடைகளை அணிந்து கல்லூரியின் சின்னம் பொறிக்கப்பட்ட பதாதைகள் மற்றும் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக நடந்து சென்றனர்.

மேலும் நடைபவனியில் பிரதேசத்தின் கலாச்சாரம் சார்ந்த விடயங்கள் விளையாட்டு அணியினர்,சாரண இயக்க அணியினர், சுற்றாடல் முன்னோடிக் கழக படையினர்,மாணவர் தலைவர்கள்,போதை பொருள் ஒழிப்பதற்கான ஊர்தி அணியினர், நஞ்சற்ற உணவிற்காக வீட்டுத் தோட்டம் செய்வோம் என்ற விழிப்புணர்வு ஊர்தி , மகாகவி பாரதியார் இராவணன்,திருவள்ளுவர் ஆகியோரின் உருவப் படம் தாங்கிய ஊர்தி என பாடசாலையின் திறமைகளை வெளிப்படுத்தும் விடயங்கள் இவ் நடை பவனியில் அமைந்திருந்தது.

முறக்கொட்டான் சேனை இரமகிருஸ்னா வித்தியாலய ஆரம்ப பாடசாலையில் இருந்து ஆரம்பமான இவ் நடைபவனியானது திருமலை வீதி வழியாக வழியாக வந்து பாடசாலை சென்றடைந்தது.

மட்ககு கிரான் மத்திய கல்லூரியின் 78 வது கல்லூரி தினம்

மட்ககு கிரான் மத்திய கல்லூரியின் 78 வது கல்லூரி தினம்

மட்ககு கிரான் மத்திய கல்லூரியின் 78 வது கல்லூரி தினம்