மட்டு.வாழைச்சேனையில் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்து  சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும், கவனஈர்ப்புப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப் பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம், இன்று திங்கட்கிழமை காலை வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது

வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர், கடந்த வெள்ளிக்கிழமை கடமை நிமித்தம் தனது பிரதேசத்திற்கு சென்று வரும் போது, சில நபர்களினால் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தாக்குதலை மேற்கொண்டவர்களை இதுவரை பொலிஸார் கைது செய்யவில்லை, என தெரிவித்து பிரதேசசெயலக உத்தியோகஸ்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்

இதன்போது, அவ்விடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர்களை தாங்கள் தேடிக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், தெரிவித்தார்.

பொஸிஸாரின் உறுதிமொழியை அடுத்து, ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பாதிகரியிடமும், பிரதேச செயலாளரிடமும் மகஜர் கையளித்து விட்டு கடமைக்கு திரும்பினர்.