மட்டு.புதுமுகத்துவாரம் இக்னேசியஸ் வித்தியாலய மின் இணைப்பு வயர்கள் களவு
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய மின் இணைப்புக்கான வயர்கள் இனந்தெரியாதோரால் நேற்று புதன்கிழமை வெட்டிச் செல்லப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 20000 பெறுமதியான 100 யார் கறுப்பு உயர் அழுத்த வயர்களே களவாடிச் செல்லப்பட்டுள்ளன.
நாளை மறுதினம் சனிக்கிழமை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிலையமாக இப்பாடசாலை செயற்படவுள்ள நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரால் காத்தான்குடி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து காத்தான்குடி பொலிசார் பாடசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.