Sri Lanka Tamil News Site

மட்டு.கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம் தனது சாதனையை பதிவு செய்தது

- Advertisement -

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தின் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம் முதற்தடவையாக தனது சாதனையை பதிவு செய்துள்ளது.

அதன்படி, இப்பாடசாலையில் இருந்து மருத்துவபீடத்திற்கு இருவரும், பொறியியல் பீடத்திற்கு இருவரும் தெரிவாகியுள்ளனர்.

- Advertisement -

இதேவேளை, விஞ்ஞான பிரிவில் நான்கு மாணவர்களும், வர்த்தக பிரிவில் 5 மாணவர்களும், கலைப்பிரிவில் 3 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

அத்துடன், கடந்த 6 வருடத்திற்கு முன் இப்பாடசாலையிலிருந்து மாவட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்து யுகேசன் என்ற மாணவன் மருத்துவ பீட்த்திற்கு தெரிவாகியிருந்தார் மற்றும் துசாரா என்ற மாணவியும் ஐந்து வருடங்களுக்கு முன் இதே பாடசாலையில் இருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!