மட்டு.கல்லடி உப்போடை இராமகிருஷ்ணமிஷன் பாலர் பாடசாலை விளையாட்டு விழா
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ணமிஷன் சாரதா பாலர் பாடசாலை விளையாட்டு விழா ராமகிருஷ்ண மிஷன் விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம் பெற்றது.
கல்லடி உப்போடை இராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் அனுரேகா விவேகானந்தன், மற்றும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.மேகராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது ஆரம்ப நிகழ்வாக பொது முகாமையாளரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அதிதிகளால் இரிமகிருஸ்ணமிஷன் கொடி மற்றும் பாடசாலைக் கொடி ஆகியன ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய கீதம் இசைத்தல், ஒலிம்பிக் தீபம் ஏற்றல், சத்திய பிரமாணம் செய்தல் ஆகியன சிறார்களால் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றி பெற்ற சாரதா பாலர் பாடசாலை சிறார்களுக்கு இராமகிருஸ்ணமிஷன்பொது முகாமையாளர், மற்றும் அதிதிகளால் சான்றிதழ்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
விளையாட்டு விழாவுக்கு சாரதா பாலர் பாடசாலை ஆசிரியர்கள், சிறார்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்