மட்டு. ஏறாவூரில் விபத்து: ஒருவர் பலி
மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
விபத்தில் மோட்டார்சைக்கிள் ஓட்டுனரான ஏறாவூர் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய அஜீத்குமார் என்பவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய ரக உழவு இயந்திரத்தில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
விபத்து மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.