மட்டக்களப்பு : 2பிள்ளைகளின் தந்தை ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் உயிரிழப்பு
- Advertisement -
மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான இவர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி புனர்வாழ்வு அளிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
இவருடைய உடல்நிலையில் மோசமடைந்த நிலையில் வவுனியா வைத்தியாசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான இவருடைய நுரையீரல் மற்றும் உடற்பாகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இவர் மரணமடைந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
- Advertisement -