
மட்டக்களப்பு – வாழைச்சேனையில் மகன் தாக்கியதில் தாய் மரணம்
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேணிநகர் பகுதியை சேர்ந்த யாசகம் பெற்று வாழ்ந்து வரும் 65 வயது தாயே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
குறித்த தாயுடன் வாழ்ந்து வந்த 46 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாக்கி குறித்த தாய் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மகனை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.