மட்டக்களப்பு வாகரையில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வாகரையில் இல்மனைட் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அங்கு அமைக்கவிருக்கும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்ட பேரணி இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

கதிரவெளி கட்டுமுறிப்பு சந்தியிலிருந்து இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகிய ஆர்ப்பாட்ட பேரணி கதிரவெளி தபால் நிலையம் வரை சென்றது.

அங்கு கோரிக்கைகள் அடங்கிய மனு ஜனாதிபதி செயலகத்திற்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது

வாகரை பிரதேசத்தில் தொடர்ச்சியாக இல்மனைட் அகழ்வு இடம்பெறுவதாகவும், மேலும் கட்டுமுறிப்பு ஆற்றுப்பகுதியில் இறால் பண்ணை அமைக்கப்படவிருப்பதாகவும், குறித்த இறால் பண்ணைக்கு அனுமதி வழங்கி எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்வாறு இடம்பெறும் இல்மனைட் அகழ்வை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும், இறால் பண்ணைக்கு அனுமதி வழங்க வேண்டாமென்றும் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுற்று சூழல் நீதிக்கான மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில், அருட்பணி லூத் ஜோன் அடிகளார், தவத்திரு வேலன் சுவாமிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர் சீலன், வாகரை மற்றும் மட்டக்களப்பு பொது அமைப்புகள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்