
மட்டக்களப்பு -வந்தாறுமூலை மயான வீதியில் தேங்கி இருந்த வெள்ள நீரை அகற்றும் நடவடிக்கை!
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து, மட்டக்களப்பு -வந்தாறுமூலை மயான வீதியில் தேங்கி இருந்த வெள்ள நீர், ஓடுவதற்குரிய தற்காலிக வடிகாலமைப்பு வெட்டப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத்தின் பணிப்புரைக்கு அமைய, ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உதவியுடன், பிரதான இணைப்பாளர் தர்மலிங்கம் பிரபாகரன் மேற்பார்வையில், குறித்த சீரமைப்பு வேலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.