மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மௌனம் ஒன்பதாவது நாளாக பண்ணையாளர்கள் வீதியில்

ஒன்பதாவது நாளாகவும் தொடரும் மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் தொடர்ச்சியாக இன்றுடன் 9 நாட்கள் கடந்துள்ளது.

தங்களுடைய கால்நடைகளின் மேச்சல்த்தறையை மீட்டுத் தரக் கோரி பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்படும் அறவழிப் போராட்டமானது இன்றுடன் ஒன்பது நாள் கடந்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என பண்ணையாளர்கள் அங்கலாய்கின்றனர்.

கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் இடம்பெற்று வரும் விவசாய கூட்டங்கள் இடம்பெறுகின்ற போதும் பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றினை தருவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் மௌனமாக இருப்பதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

தங்களது உரிமைக்கான போராட்டத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரிடம் கலந்து ஆலோசித்து தீர்வினை பெற்று தருவதாக கூறினாலும் எப்போது அந்த தீர்வினை தருவார்கள் என்று கேள்வியும் எழுந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அத்துமரிய பெரும்பான்மை இனத்தவர்களின் பயிர்ற் செய்கை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக மழை பெய்து வருவதனால் அவர்கள் நிலத்தை பதப்படுத்தி பயிர்களை நடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தங்களது கால்நடைகளை எங்கு கொண்டு மேய்ப்பது என்ற பாரிய கேள்வி எழுப்பி உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மாவட்டத்தின் நிர்வாக பொறுப்பில் உள்ள அரசாங்க அதிபர் இதற்கான தீர்வை வழங்குவதற்கு பின்வாங்குவதாகவும் உடனடியாக பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தில் விளையாடாமல் தங்களுக்கான ஒரு நிரந்தர தீர்வினை பெற்று தர வேண்டும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மௌனம் ஒன்பதாவது நாளாக பண்ணையாளர்கள் வீதியில்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்