மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 4,450 குடும்பங்கள் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 4,450 குடும்பங்களை சேர்ந்த 13,922 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதேவேளை மாவட்டத்தில் இதுவரையிலும் எவ்வித உயிர் சேதங்களும் பதிவாகவில்லை என்பதுடன் 41 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும் 2,688 குடும்பங்களை சேர்ந்த 8,798 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதுடன் 28 பாதுகாப்பான அமைவிடங்களில் 1,033 குடும்பங்களை சேர்ந்த 2,869 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.