மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் குறைவு : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரச்சுட்டெண் குறியீடானது 50 சதவீதத்தை விடவும் குறைந்தளவிலேயே காணப்பட வேண்டும்.

எனினும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் குறித்த அளவானது 120 மற்றும் 130 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரமானது குறைவடைந்துள்ளதன் காரணமாகச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் வைத்திய ஆலோசனையைப் பெறுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.