மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கு அப்போஸ்தலிக்க பரிபாலகர் நியமனம்
-மட்டக்களப்பு நிருபர்-க.கிருபாகரன்
மட்டக்களப்பு மறைமாவட்டத்திற்கு அப்போஸ்தலிக்க பரிபாலகராக அதிவந்தணைக்குரிய ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை இன்று திங்கட்கிழமை பி.ப 3.30 மணிக்கு திருதந்தையினால் அறிவிக்கபட்டார்.
அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தேசிய கத்தோலிக்க இளைஞர் சம்மேளனத்தின் பொறுப்பு ஆயராகவும், கொழும்பு மறை மாவட்டத்தின் துணை ஆயராகவும் பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் அருட்கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்