
மட்டக்களப்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை முதல் பெய்து வரும் கன மழை காரணமாக குளங்களின் நீர் மட்டம் அதிகரித்த நிலையில் பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
உன்னிச்சை குளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 1 மணியளவில் வான் பாய ஆரம்பித்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணி வரையில் கிடைக்க பெற்ற தகவலின்படி 3 வான் கதவுகள் 6 அடி வரையில் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் நவகிரி குளத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆற்றை அண்டிய பிரதேசங்கள், தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் தேவை ஏற்படின் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராக இருக்குமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.