மட்டக்களப்பு மகிழவட்டுவன் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மகிழவட்டுவான் மகா வித்தியாலயத்திற்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை நேற்று வியாழக்கிழமை வழங்கி வைத்தார்.

சஜித் பிரேமதாசவினால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 286 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்,  மட்டக்களப்பு மகிழவட்டுவான் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது

இதன்போது, பாடசாலை நூலகத்திற்குத் தேவையான ஆங்கில நூல்களைக் கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்