மட்டக்களப்பு மகஜனா கல்லூரி மாணவியின் ஜனாதிபதியுடனான அழகிய உரையாடல்!

நாம் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும், ஏற்றுமதிசார் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘கோல்டன் ரிவர்’ ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளையோர் அணி சந்திப்பிலேல் கலந்துகொண்டார்.

இதன்போது மட்டக்களப்பு மகஜனா கல்லூரயின் மாணவி ஒருவர் ஜனாதிபதியிடம் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் வளங்களிலிருந்தும், பல பொருட்களை வௌிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். நமது தொழிற்சாலைகளை மேம்படுத்த உங்களிடம் எவ்வாறான யோசனைகள் உள்ளன?, என குறித்த மாணவி கேள்வி எழுப்பினார்.

அதற்கு,  உங்களுக்கு பிடித்த பாடகர் யுவன் சங்கர் ராஜா என்று சொன்னீர்கள். அப்படியானால் பாடல்களையும் நாம் இறக்குமதி தானே செய்கிறோம். திறந்த உலகில் எமது சந்தைகளை வலுவூட்ட வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. நமது நாட்டின் உற்பத்திளை ஏற்றுமதி செய்வது குறித்து இதுவரை கவனம் செலுத்தவில்லை. நாம் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும். ஏற்றுமதிசார் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். நெருக்கடி காலத்தில் எம்மிடம் போதிய வௌிநாட்டு கையிருப்பும் இருக்கவில்லை. எரிபொருள் உள்ளிட்டவைகளை இறக்குமதி செய்யவும் வௌிநாட்டு வருவாய் தேவைப்படும். அவ்வாறான தேவைகளுக்காக பெற்றுக்கொண்ட கடனை எம்மால் மீள செலுத்த முடியாமல் போனது.

அதனால் எம்மிடத்திலிருக்கும் வளங்களைப் பயன்படுத்தி அதனூடாக ஏற்றுமதியை பலப்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும் என ஜனாதிபதி பதிலளித்தார்.

குறித்த மாணவியுடன் ஜனாதிபதி சகஜமாகவும், நட்புடனும் உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்