மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சத்திரசிகிச்சை கட்டடத் தொகுதி கையளிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசினால் நிர்மானிக்கப்பட்ட புதிய சத்திரசிகிச்சை கட்டடத் தொகுதி கையளிப்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது புதிய சத்திரசிகிச்சை கட்டடத் தொகுதியை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித்த மகிபால ஆகியோர் திறந்துவைத்தனர்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் க.கலாரஞ்சினி, மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்