மட்டக்களப்பு பாரதியார் பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டு விழா

மட்டக்களப்பு கருவேப்பங்கேணி சண்பிளவர் விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பாலர்களுக்கான வருடாந்த விளையாட்டு விழா இடம்பெற்றது.

பாலர் பாடசாலையின் பிரதான ஆசிரியர் விநாயகமூர்த்தி ரஜினி தலைமையில் இடம் பெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயம் பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் திரு . எஸ். பரணிதரன் மற்றும் கௌரவ அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் ச. சுரேஷ்குமார், கிராம அபிவிருத்தி உத்தியோஸ்தர் திருமதி . ஜே.யோனெலாமாறி, சன் பிளவர் விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு . கே. அன்ரனிதாஸ், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் காந்தராஜா, ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய பரிபாலனசபை தலைவர் ஜெ.ஜெயக்குமரன் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் இடம் பெற்ற,  உடற்பயிற்சிக் கண்காட்சி, ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்தன. இதன் போது பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பாலர் பாடசாலையின் பழைய மாணவர்கள் இமாணவிகளின் பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.

மட்டக்களப்பு பாரதியார் பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டு விழா

மட்டக்களப்பு பாரதியார் பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டு விழா

மட்டக்களப்பு பாரதியார் பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டு விழா