மட்டக்களப்பு பாடும்மீன் சமர் 2024 : வெற்றிக்கிண்ணத்தை வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை கைப்பற்றியது

மட்டக்களப்பு பாடும் மீன் சமரின் 2024 ஆம் ஆண்டுக்கான வெற்றிக்கிண்ணத்தை வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை கைப்பற்றியது.

மட்டக்களப்பு பாடும் மீன் சமர் என்று அழைக்கப்படும் மாபெரும் மகளிர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.

வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கும் சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலைக்கும் இடையில் 11 ஆவது வருடமாக மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியாக இது இடம் பெற்றது.

20 ஓவர்களை கொண்ட இந்த சுற்றுப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன் வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை களத்தடுப்பை மேற்கொண்டது

வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையை வீழ்த்தி வெற்றியைத் தனதாக்கியது

இந்நிகழ்வுக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்