
மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து: 7 பேர் காயம்
-மூதூர் நிருபர்-
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள கல்லாறு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கல்லாறு பகுதியில் சிறிய ரக பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த 7 பேரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, காத்தான்குடியை நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்