மட்டக்களப்பு நகர் பகுதியில் பேருந்து விபத்து

மட்டக்களப்பு நகர் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை வீட்டு மதிலுடன் மோதி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தே இன்று காலை கோவிந்தன் வீதி வளைவு பகுதியினூடாக திரும்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மதிலின் ஒரு பகுதி முழுமையாக சேதம் அடைந்துள்ளதுடன் பேருந்தின் முன் பக்கமும் சேதம் அடைந்துள்ளது. எனினும் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்